செல்லமே

செல்லமே!!
மெல்லமாய் ஓர் பார்வை
வெல்லமாய் நீ பார்க்காவிடில்
உள்ளமோ என்
கள்ளமெல்லாம் உணர்ந்து
அள்ளல் செல்கிறது
அடுத்த நொடி...

உன்னை உள்ளல் கொள்ளையிலே
கள்ளலாகிறது என் கனா
அங்ஙனம்
நீயே கனாவாய்
நிறைந்து கொள்கிறாய்...

உள்ளமெனும் பள்ளத்தின்
தெள்ளத்தில் சிக்கிய என்னகமோ
புள்ளம் இருந்தும், இல்லாயுமாய்
நடிக்கிறது நலமாக!

நீ
மள்ளம் கொண்டு கீற்றெடுத்த என்
உள்ளமும் வலியே இன்றி களியோடு...

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (19-Dec-15, 11:07 pm)
Tanglish : chellame
பார்வை : 210

மேலே