முதல் காதல்

பயம்தான் எனக்கு நிலவின் அருகில் செல்ல.. தொலைவிலிருந்து ரசித்துக் கொள்கிறேன் விழியீர்கும் உன் விழிகளை....!
விழிகளை கைது செய்யும் இமைகள் கூட தண்டனையை தளர்த்திக்கொள்கிறதோ...
உன்னைப்பார்க்கும்பொழுது...!
குழப்பம்தான் எனக்கு,உன்னிடம் பேச நினைப்பதை கவிதையாய் எழுதியிருக்கிறேன்....
என்றோ ஒரு நாள் நீ படிக்க நேர்கையில் அத்தனையும் கற்பனை என்று சொல்லிவிடுவாயோ.....!
நித்தமும் உனக்கு பிறந்தநாளாகட்டுமே....
வாழ்த்துச்சொல்லவாவது உன்னுடன் பேச வாய்ப்பு கிடைக்குமே....!
கடினமாகத்தான் உணர்கிறேன்... கடலின் ஆழத்தைவிட காதலின் ஆழம் சற்று அதிகம் தானே...!
கரையை தொடும் அலைபோல என் காதலை என்று சொல்லபோகிறேனென்று தெரியவில்லை..!
காலம்தான் என் காதலின் நடுவன்....
காதலை உன்னிடம் சொல்வதற்கும்,சொல்லமலே மறைந்து போவதற்கும்.....!

எழுதியவர் : சந்தோஷ் (22-Dec-15, 8:46 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 91

மேலே