புரியவில்லை
தொட்ட இடம் வலிக்க
இடுப்பு வலி எடுக்க
உப்புநீர் உடலை நனைக்க
கட்டுடல் வருத்தி
காலை முதல் மாலைவரை
காதலின்றி காமம் மறந்து
ஓய்வின்றி உழைப்பவன்
ஒட்டாண்டியாயே உயிர்விடுகிறான்
ஊரை ஏய்த்து
உள்ளத்தில் நஞ்சு கொண்டு
அடுத்தவன் வயிற்றிலடித்து
அடுக்கு மாடி கட்டும்
அற்பப் பதர்கள் எல்லாம்
ஊரில் பெரிய மனுசனாய்
உதவிக்கு நான்கு அடிமைகளென
உல்லாச வாழ்வு வாழ்ந்து
ஊர்வலமாய் போகின்றான்
இன்றுவரை புரியவில்லை
இறுதியில் வெல்லும்
நீதியும் தர்மமும்
இதிலெங்குண்டென்று.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
