சமையல்காரனின் காதல்

கண்ணே,
அன்பிற்கு நீயொர் அண்டா
பண்பிற்கு நீயொர் பாத்திரம்
பாலுடன் கலந்த சக்கரையாய்
நாம் கலந்திருக்கலாம்
நீ இல்லையென்றால் என்
வாழ்வு பாவக்காயாய் கசக்கும்
நம் காதல் கத்திரிக்காயல்ல
எளiதாய் கிடைப்பதற்கு
என்றோவது நான் நன்றாய்
சமைக்கும் நல்விருந்து
கிடைப்பதற்கு அரிது

உன்னை காணும்போது என்
நெஞ்சு சுடுபாலாய் கொப்பளiக்கிறது
வா வந்து தண்ணிர்
தௌi அடங்கட்டும்
இரவிலே என் கனவிலே
உப்புமாவை போல் என்னை
கிண்டு கிண்டுகிறாய்
பகலிலே என் நினைவினை
தேங்காயை துருவது போல்
துருவு துருவிகிறாய்

ஏலக்காய் போல் வாசம்
தூக்குகிறது நீ அருகில்
வந்தால்
பொங்கல் போல் என்மனம்
பொங்கிறது நீ என்னுடன்
பேசினால்
அரும்சுவை விருந்தாய்
அமையும் நீ தரும் சம்மதம்.


- செல்வா

எழுதியவர் : செல்வா (25-Dec-15, 11:38 pm)
சேர்த்தது : செல்வா
பார்வை : 557

மேலே