நிர்கதியாய் மனசாட்சி

நிர்கதி !

எழுதவே முடியாத
எத்தனையோ உணர்வுகள்
மனிதனுக்குள் உறங்கித்தான் கிடக்கிறது ...............

அடிபடும்பொழுது அவதியுறும் உடலுக்கும்
அவமானத்தில் அவதியுறும் மனதிற்கும்
நீண்ட வித்தியாசம் உண்டு ..............

காயத்தினால் கண்ட வலிகள்
காணமல் போனாலும்
அவமானங்கள் தந்த அவஸ்த்தை
மனிதனின் மரணம் வரை மறப்பதில்லை ..........

பொதுவாகவும் பொழுதுபோக்காகவும்
பேசப்படும் வார்த்தையே
இன்றைக்கு மனசாட்சி ஆகிவிட்டது ..............

தனக்கென என்றால் ஒன்றும்
பிறர்க்கென என்றால் ஒன்றும்
பிரித்து பார்க்க கற்றுக்கொண்டுவிட்டது
மனிதர்களின் சுயநலம் .........

மனிதன் மனிதனுக்குள்ளே
விட்டுகொடுத்து போகவேண்டிய எத்தனையோ காரியங்களில்
போராடி தோற்று போருக்குபின்னே
விழிக்க முயல்கிறது மனசாட்சி !

மிருகங்களையும் வதைக்ககூடாது
என்கின்ற இறக்கவாதிகளும் கூட
மனிதர்களின் அகோர மரணத்தை
தடுக்க முடிவதில்லை .............

எதை எதையோ பிரிவாய், மதமாய் , மொழியாய், மாநிலமாய்
மற்றும் எல்லைகளாய் சிதைத்து
பேதங்களின் உச்சத்தில் மனிதர்க்குள்ளே மரணகாரர்களை
உருவாக்குகிறது இன்றைய அரசியல் அரக்ககூட்டம் ..............

ஆயினும் மாற்று சிந்தனைகளுக்கு
கொடுக்கப்படும் தனித்துவம்
மனித நேயத்திற்கு கொடுக்கப்படவில்லை
என்பதே கொடூர வேதனை .............

மனிதனாய் பிறந்து மனிதனே மனிதனுக்கு செய்யும்
மாபெரும் துரோகங்களால்
நிர்கதியாய் நிலைகுலைந்து நிற்கிறது
"மனசாட்சி "!

எழுதியவர் : வினாயகமுருகன் (27-Dec-15, 11:19 am)
பார்வை : 74

மேலே