நண்பன் - கற்குவேல் பா

வேலை தேடி
பட்டணம் வரும் ஒருவனுக்கு ,
பொட்டணம்
உணவு வாங்கிக் கொடுத்து - அவன்
உண்பதைக் கண்டு மகிழ்ந்து ;
தன் வயிற்றினை
நீரால் நிரப்பிக் கொண்டு ,
நிம்மதியாக
உறங்கச் செல்லும் ஒருவன் ;
நண்பனாக மட்டுமே
இருந்திடக்கூடும் !
#நண்பன்