முதல் தோழா
அன்னையவள் என்னை
ஈன்றபோது அவளருகில்
நான் கண்ட முதல் உறவு
ஆக்கம் தந்த தந்தை அவர்.........
நீ அவருமல்ல.............
கரம்பிடித்து உற்ற உறவாய்
நித்தம் காத்து வந்த உடன்பிறப்பு
அண்ணன் அவன்........
நீ அவனுமல்ல........
தேகம் தீண்டி சிறு
சண்டை போட்டு
விளையாடினாலும்
எந்தன் உணர்ச்சி தீண்டா
உறவாய் உடன் இருக்கும்
சகோதரன் அவன்......
நீ அவனுமல்ல......
இதயம் துடிதுடிக்க என்
விழிகள் படபடக்க
என்னுள் இரண்டறக் கலந்த
இனிய உறவாய் உள்ளத்தில்
நிலைத்த காதலன் அவன்......
நீ அவனுமல்ல............
எல்லாம் கடந்த வாழ்வு
களைத்துப் போனானாலும்
இல்லறம் புகும் இவளை
இன்னுயிர் நீங்கும் வரை
தாங்கும் உறவு கணவன் அவன்......
நீ அவனுமல்ல............
பாலினம் உணரா
பள்ளி பருவம் எனினும்
என்னை பாலியல் அரக்கன்
பார்வை தின்று தீர்க்குமே !......
அவனா நீ ?.....
வீதியில் வந்தாலே என்மேனி
உருக்குலைக்கும் பார்வைகள்
உண்டே அவனா நீ........
எவனோடோ காதல் கொண்ட
இவளை மோகப் பார்வை
முட்டிப் பார்க்குமே !......
அவனா நீ ?.....
அடுத்தவன் மனைவி
இவள் ஆன போதும்
காமம் கலந்த வார்த்தைதனில்
கரைத்து விட நினைப்பானே !.......
அவனா நீ ?.......
கலியுக காலம்தன்னில்
எளிதில் எவரையும் அருகில்
சேர்க்க ஐயம்தான் தோழா.....
ஆகவே !
உன்னை தோழனாய் ஏற்க
மனம் சற்று சலனமடைந்து
இடைவெளி கொண்டு பயணித்தது
உண்மைதான் தோழா மன்னித்துவிடு !........
***************தஞ்சை குணா************