நவீன ஆர்வலர்களே புரிதல் தெளிக

* தொழில்நுட்ப நெருக்கடியின்
பொருளாதார முனைப்புகளில் ;

அறிவியல் ஆர்வலர்களாய்
அறிமுகமாயினர்
ஒருவருக்கொருவர் ...!

கருத்தொருமித்தனரோ...?

கலைப் பெருவெளியில் ;
பூகோளமே
புல்லரிக்கப்
பேசிச் சிறகடித்து ;

நிலா தவிர
பலவும் உலவி...

அரும்பு பூவாகி
பூ காயாகி
காயும் கனிந்து ;

ஆர்ப்பரித்த நட்பு
ஆனது
அமுதக் காதலாய்...!

* பொருளாதார ஒப்பந்தமும்
பொறுப்பாய் நிகழ்ந்து ;

அமுதக் காதலும்
நாணுது
திருமணக்கோலமாய் ...

வாழியவே...! ! !

* " மாற்றம் ஒன்றே
மாறாதது ;
ஏற்றத்தாழ்வு
மாயைதான் ...! "

* இன்றிரவும் - நவீன
அன்றிற் தம்பதியருள்...

புரிதலில் வன்முறை ;
புரியவில்லை மென்முறை ...!

நாட்டுக்குச் சுதந்திரம் ;
வீட்டுக்கல்ல ...!

* கசந்தது அமுதம் ;
கசக்கவில்லை ஐயம்...!

அவன்
இவளை உமிழ...

இவள்
அவனை உமிழ...

கண்டனர் மன விகாரம் ;
கொண்டனர் மண விவகாரம்...!

* ஓர்நாள்
நலமாய்ப் பிறந்தது ?
தீர்ப்புக் குழந்தை...

" பிரிகிறோம்
நட்புடன்...! "

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (27-Dec-15, 4:53 pm)
பார்வை : 66

மேலே