விடியல்

வெள்ளம் வந்த போதிலும்
வேதனை வேண்டாம் வெண்ணிலவே!
அவலம் ஒன்றும் இல்லையடா
அம்மா இருக்கேன் அமைதிபெரு!

பசியும் மறத்துபோனதடா உன்;
பாலகன் முகத்தை
பார்க்கயிலே!

மழையும்
வெள்ளமுன்
மறைந்ததுவே!
சூரியன் மறையும் முன்னே
சுடு சோறும் தாரேன்
சுவையாய் நான்!

வெய்யில் விழவும் விடமாட்டேன்!
வேதனை படவும் விடமாட்டேன்!
சமத்தாய் மடியில் சாய்ந்துக்கொள்!
சங்கடம் நானும் தரமாட்டேன்!

தாயின் மடியில் இருந்தாலும்;
தாய் மண்ணே நமக்கு
தளம்தானே!

கவலை வேண்டாம்
கண்மணியே!
காத்திருப்போம் நல்ல
காலம் வரும்!

எழுதியவர் : hajamohinudeen (28-Dec-15, 5:27 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
Tanglish : vidiyal
பார்வை : 914

மேலே