உலகின் பேய்

எவ்வளவோ சொன்னாலும் ....
எத்தனை ஆதாரத்தை ...
காட்டினாலும் - உண்மையான ...
தகவலை சொன்னாலும் ....
நம்பாதவன் ....?
வேண்டுமென்றே ....
விவாதம் செய்பவன் ....
ஆதாரம் இருந்து மறுப்பவன் ....
உலகின் " பேய்" என்று ....
இவனைத்தான் சொல்வர் ....!!!
+
குறள் 850
+
புல்லறிவாண்மை
+
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 70