புதியதொரு விடியல்

நிலவின் ஒளியில் நீலக்கடல் நிம்மதியாய் உறங்க - உன்
நினைவுகளில் எனக்கு உறக்கமே இல்லை ....
இன்னும் சில நொடிகளில் பிரியப்போகும்
உன் பிரிவை நினைத்து வருத்தம் கொள்வதா ??
இல்லை பல மாதங்கள் கடந்து நிற்கும்
புது உறவை நினைத்து மகிழ்ச்சி கொள்வதா ??

இரவெல்லாம் கண் விழித்து
இனிமையான நினைவுகள் அசைப்போட
இறுதியில் முடிவொன்று கண்டேன் .....!!!!

முடிந்து போவதை நினைத்து
மடிந்து போவதை விட
வரப் போவதைக் கொண்டு
கரையேரப் பழகிடலாமென்று

கடந்து விட்ட தருணங்களை
கரைந்து விட்ட நிமிடங்களை
நடந்து வந்த பாதைகளை
நடைப் பழகிய நாட்களை
மறந்து விடாது நெஞ்சில்
மலரும் நினைவுகளாய் கொண்டு
மகிழ்ச்சியோடு பூக்கும் புத்தம்புது
புத்தாண்டை நல்ல எண்ணங்களோடு வரவேற்போம் ....!!!

மீண்டும் ஒரு புதிய தொடக்கம் .....
புதுமை இல்லை இந்நாளில் ஆயினும் வரவேற்போம்
புதியதொரு விடியலை கனவுகளோடு ....
கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் புது உணர்வோடு ....
உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் உயிர்களோடு .....

எழுதியவர் : கோகிலாமணி (1-Jan-16, 8:53 am)
பார்வை : 84

மேலே