மறந்தும் இருந்து விடாதீர்கள்

பரமசிவனின் கழுத்தில்
இருந்ததில்லை ..
அதனால் யாரையும்
உயரத்தில் இருந்து
பார்த்ததில்லை..
வெறும் தண்ணீர்ப் பாம்புதான்..
நான்!!

என்னால் எவரும்
மடிந்ததில்லை ..
வெள்ளம் வந்ததில்
நான் தெரிந்தேன்..
அவ்வளவுதானே
என்றே விடுங்கள்
விஷம் இல்லாததால்
விட்டு விடுங்கள்!

ஒரு முறை போதும்
எனக்கே ..
ஓட்டுப் போடுங்கள்..
அப்புறம் அதோடு
மறந்து விடுங்கள்!

சக்திக்கு மீறி
செலவு செய்தேன்..
எப்படியும் அதை
வட்டியும் முதலுமாய்
மீட்டிடுவேன்..

ஒரே ஒரு முறை
எனக்கே ..
ஓட்டுப் போடுங்கள்..
அப்புறம் அதோடு
மறந்து விடுங்கள்!

இந்த எனது..
ஐந்தாண்டு திட்டம்..
இல்லை ..
இல்லை ..
இந்த எனது..
நேர்மையை மட்டும்
எந்த நாளும்
நினைவில் வையுங்கள் !

எழுதியவர் : கருணா (2-Jan-16, 5:24 pm)
பார்வை : 396

மேலே