என் காதலே

***************************என் காதலே***************************

கண்டுவந்த நாள்முதலாய் காட்சிகள் மறைந்ததடி!!
கண்ணுறக்கம் காணாமல் உனைக்காண துடிக்குதடி!!

பெண்மயக்கம் வந்நதென்று பாரோர்தினம் வசைபாட
மீண்டுவந்து வாழென்று நண்பர்நல் உரைகூற;

உன்னில் கரைந்துநான் நீயாகிப் போகிறேன்!!

உண்டுறங்கி உடல்பெருக்கி மோகத்தால் இனம்பெருக்கி
உண்டுவந்த சோற்றிலே பங்குவைத்து பாடெடுத்து;
கொண்டதெல்லாம் கரைந்துவிட்ட பின்னர்நெஞ்சு பேதலித்து
உண்டவர்க்கே பாரமாகி நலிவுற்று சாய்ந்தபின்னே
கொண்டுபோன எமனுக்கு எதிர்கோஷம் போடுவார்க்கு!!

கண்டதே காட்சியென்று கண்டுசொன்ன பேர்களுக்கும்!!
கொண்டதே கோலமென்று கொண்டாடும் பேர்களுக்கும்!!

உண்டான நாளென்று ஊர்காணா உயர்தமிழே!!
வண்டிருக்கும் மாங்கனியாய் என்நெஞ்சை தெரியுமோ??

கொண்டதெலாம் ஒன்றாக்கி குன்றாக குவித்தாலும்
பண்பாட்டு சிறப்பினிலே பார்போற்றும் பெருமகளே!!
முதுமையில் நோயென்று ஈன்றோரை பழிப்பார்க்கு!!
பொதுவிலே வாக்களித்து மறைவிலே மறப்பார்க்கு!!

உண்டுணர்ந்து சொல்லுகிறேன் உண்டது அமுதென்று
கண்டுணர்ந்து கொள்வார்கள் யாருளரரோ?? நானறியேன்!!

_தமிழ்நேசன்(KK)

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (2-Jan-16, 11:25 pm)
பார்வை : 157

மேலே