தேர்தல்

தெளிந்திடு மக்கா!
தேர்தல் வருகிறது !

ஒரு புள்ளி மையில்
உன்னை அறிவாய்;
வைக்கும் புள்ளியில் - உன்
வாழ்க்கை இருக்கு !

வறுமை போக்கி
வளமாய் வாழ;
தெளிந்திடு மக்கா
தேர்தல் வருகிறது !

வார்த்தை ஜாலத்தில்
மயங்கிவிடாதே!
வறுமை நிலையை
மறந்துவிடாதே !

மதுவும் வேண்டாம்!
மானியமும் வேண்டாம் !
தெளிந்த நீராய்
தேர்தலை கொடு !

மதுவை விடு!
மாற்றம் கொடு !

போதையில் ஏறும் ஆட்சி
தள்ளாடத்தானே செய்யும் !
பொறுத்துக்கொள்
தேர்தல் முடியும்வரை !

தண்ணி அடிக்காதே !
தலை குனியாதே !
நிமிர்ந்து நில் !
நிதானமாய் !

எழுதியவர் : hajamohinudeen (3-Jan-16, 5:32 pm)
Tanglish : therthal
பார்வை : 523

மேலே