பணம்

பணம் தேவை நிரந்தரமாய்
பணமில்லா வாழ்க்கை பிணம் தான்
தேனினும் இனிய பணமே
எனைத் தேடி வந்து சேர் தினமே...

சுடுகாட்டில் சுட்டெரிக்கவும்
சோறு தண்ணி குடிக்கவும்
பள்ளி சென்று படிக்கவும்
பைசா இல்லாமல் முடிவதில்லை...

பார் தேடும் பணம் பணம்
பரிதவிப்போர் நிதம் நிதம்
காசு தேடி ஓடாத நிலை
கடைசி வரை நிலைக்க வேண்டும்...

கல்யாணம் காரியம் எல்லாமே
பணமிருந்தால் கைகூடும்...
உறவுகள் நண்பர்கள் யாவும்
ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும்...

பணமின்றிப் போனோமென்றால்
சீண்ட ஒரு தெரு நாயும் இல்லை...
இருக்கும் இருப்பை சேமித்து
நிதானமாய் செலவு செய்வோம்...





எழுதியவர் : shruthi (12-Jun-11, 2:09 am)
சேர்த்தது : shruthi
Tanglish : panam
பார்வை : 492

மேலே