உயிரோவியம்

உனக்கான பிறந்த நாள்
பரிசு தர
சிறந்த ஓவியம்
எழுதிடத்
தாளோடு
வண்ணமும் தூரிகையும்
வாகாய் எடுத்து

அடடா

கூர் சீவப்படாமல்
பென்சில்
கை விரலில் அணைத்தபடி
பென்சிலுக்கு
ப்ளேடால் சவரம்
விரல் கிழித்தது
கூர் ப்ளேடு

கொட்டிய ரத்தச் சொட்டுகளோடு
என் உயிரின்
உதிரத் திட்டுக்களையும் கூட்டி
தாளில் ஷ்ப்ரயோகித்து
வாழ்த்தோவியம் வடித்து

உன் கரங்களுக்குக்
காத்திருந்து கொடுத்து

அத்தனையையும்
அலட்சியப் படுத்தி விட்ட
உன் விழிகளுக்குத்
தெரியாது தான்
உயிரோவியத்தின்
உண்மைக்கண்ணீர் ...!

எழுதியவர் : அன்புபாலா (12-Jun-11, 7:39 am)
பார்வை : 337

மேலே