உப்பு நீரில் கரையுதடி விழிகள் 555

என்னவளே...
நீ என்னை நேசிக்க
தொடங்கிய நாள் முதல்...
என் கண்களுக்கு நீ
இமைகளாக இருந்து...
என் கண்களை நீ காத்தாய்
தென்றல்கூட தீண்டாமல்...
நீ என்னை பிரிந்து சென்ற நாள் முதல்
உறக்கமின்றி தவிக்கிறேன்...
நீ என்னை பிரிந்த காரணம்
என்னவென்று சிந்திப்பதால்...
என்னைவிட்டு நீ பிரிந்தபோதும்
எனக்கு அழகூட மனமில்லை...
இமைகளாக இருந்து என்
கண்களை காத்த இமைகள்...
உப்பு நீரில்
நனைந்துவிடுமோ என்று...
மீண்டும் ஒருமுறை என்
கண்முன்னே வந்துசெல்...
பிரிவின் காரணம்
நான் அறிந்துகொள்ள.....