தேடித் தேடி

தேடித் தேடி
அலைகிறேன்.....
மூடிய
விழிகளுக்குள்
தீ......மூட்டிய
வலிகளால்.....
விழிமூடாத
விடியல்கள்
தினமும்......நான்
காண்கிறேன்.....!

என் கவலைகளை
கடலாக்கிய
உன் சோகம் தந்த
என் கண்ணீர்.....
சமுத்திரமாகியதே.....!!

கீதையும்
புரியாது....
சீதையும்
தெரியாது....
என்னுலகம்
என்னவள்
என்றுமட்டும்
வாழ்ந்தவன்
தானே.....!?

ஒரு பயணம்
போதும்
ஓராயிரம்
நினைவுகளை
காலடியில்
கொட்டிச்
செல்லும்.....மனதில்
அனல்
கொதிக்குதே.....!!

மின்னும்
உன் அழகில்
உலக அழகியும்
பின்னுக்குத்தான்.....
தங்கமென
மின்னும்
தங்கமே.....
உன்னிடம் நான்
ஆனேனே
சங்கமம்....!!

ஊரை சுற்றிய
காற்றோடு
ஒன்றாய்
சுற்றிய.....துரும்பென
இருந்தேனே....இன்று
சிக்கிய புயலில்
சிதறிய
சிறு துண்டாகினேன்.....!!

தாளம்
தப்பிய
ராகம் ஓன்று
செவிகிழித்துப்
போனது.....!!!

காலம் போன
காட்சி
ஓன்று.....என்னை
மிரட்டிப்
போகுது.....!!!

எழுதியவர் : thampu (5-Jan-16, 5:40 am)
Tanglish : thedith thedi
பார்வை : 172

மேலே