மனசு கேட்கும்

வெறுப்பதில் முதல் இடம்,
நெருப்பாய் சுடுபவள்,
எல்லைகள் வகுத்துக்கொண்டு,
என்னை விரட்டியவள்,
ஊஞ்சலாடிக்கொண்டிருந்த தனியனை,
இனியனாக்கி பின்,
ஊசலாட வைத்தவள்,
பிடிவாதம் அவள் பெரும்சொத்து,
தலைக்கனம் அவள் நிலைத்த கிரீடம்,
ஆணவம் நாவின் அடிநாதம்,
அகங்காரம் அவ்வப்போது தலைகாட்டும்,
தூரத்து உறவினன்.............
என்றாலும்,
அவள் பாசம் காட்டினால்,
"சோ"வென்று பெய்யும் பெருமழை !
பாசம்வைத்தால் அதன்போக்கில்,
அடித்துச்செல்லும் காட்டாறு !
நிழலுக்கு அண்டினால்,
நிறைந்த காற்றையும் தந்து,
கவரிவீசும் பெருந்தகை !
தன்மையில் இரண்டறக்கலந்தவள்,
உண்மையின் தராசில் சற்றே உயர்ந்தவள் !
நிஜம் நீட்டிக்கப்படுகையில்,
இரவு பகலும்,
அதன் கர்த்தாக்கள் சூரியனும் சந்திரனும்,
இரண்டே போல,
இன்பமும் துன்பமும் இதே வகை !
துவக்காதிபதிகள் ஆணும் பெண்ணும் அதுவே !
முடிவு தேடிடும் நானே அதற்கு வரவேண்டியவன் !
எல்லாம் கலந்ததே நமக்கான வாழ்க்கை !
எது நடந்து கடந்துபோயினும் அவள்தானே,
"என் மனசு கேட்கும் மனுசி "

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (6-Jan-16, 8:22 pm)
பார்வை : 102

மேலே