என்ன என்று எழுதிருப்பாள்

மாதவி, வாங்கும் சம்பளம் வாய்க்கும் வயிறுக்கும் சரியாக இருந்தது. சிறு பிள்ளையில் அவள் கண்ட துன்பங்கள் எண்ணிலடங்கா. சிறு வயதிலேயே தன் தாய் தந்தையை விலகி வாழ கூடிய ஒரு சூழ்நிலை. தாய் தந்தை இருவரை விட்டு பிரிந்து வாழ்ந்தாலும், அவளுக்கு பாசமான ஒரு அண்ணன் இருந்தான். மாதவிக்கு அனைத்தும் அவள் அண்ணன் தான். தாய் தந்தை இல்லாத குறையை அவன் அண்ணன் வைத்ததில்லை.

ஏரியின் எழிழை இரசித்தவாறு அமர்ந்திருந்தால் அவள். அமைதியான அவ்விடத்தில் அவள் மனதில் பல குழப்பங்கள். அவள் கையில் ஒரு புல்லாங்குழழ். மலையிலிருந்து வரும் மழை நீரின் ஊற்றின் அருவியைக் கண்டவாறு, அவள் கையில் இருக்கும் குழலை வாசிக்க தொடங்கினாள். இயற்கையை இரசித்தவாறு அமர்ந்திருந்தால் அவள்.

எங்கிருந்தோ ஒர் ஏழையின் மழலைக் குரல் கேட்டு திடுக்கிட்டு தன் இசையை உடனே நிறுத்தினாள். “அய்யோ, நீயும் என் சாதிதான் மகனே”, என்று சட்டை பையிலிருந்து முப்பது ரூபாயை அவன் தட்டில் போட்டாள் அவள். “அக்கா, உங்க அண்ணனை யாரோ தெருவில ஓட ஓட வெட்டுராங்க அக்கா, போங்க அக்கா, என்னானு பாருங்க” என்று கூறி மாதவியின் கையைப் பிடித்து இழுத்தவாறு சம்பவத்தின் இடத்திற்கு நோக்கினான்.

மாதவிக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதும் அவள் செவிகளுக்கு விலங்க வில்லை. கையிலிருந்த குழலை அங்கேயே போட்டு விட்டு அவளும் ஓட ஆரம்பித்தாள். தூரத்திலிருந்து பார்த்தாள், கிராமத்து மக்கள் அனைவரும் மாதவியின் வீட்டு வாசலில் குமிந்திருந்தனர். அதை கண்டு மாதவி கதறி அழுகிறாள். தலை தெறிக்க ஓடி வீட்டை வந்தடைந்தாள்.

ஆச்சரியம்!!! வீட்டின் முன் கார் இருக்கிறது அண்ணணோ அதன் அருகில். ஓடி வந்த அவள், அண்ணனை அணைத்தவாறு அழுதுக்கொண்டே அண்ணனின் மார்பில் குத்தினாள் அவளை ஏமாற்றியதற்கு. சிறிது நேரம் சென்ற பின்,..
“ஆமாம் அண்ணே, இந்தக் கார் யாரது???” என்ற கேள்வியோடு அண்ணன் முகத்தைப் பார்த்தால். அப்போது காரின் உள்ளிருந்து ஒர் இளைஞன் வெளிவந்தான். யார் இவன் என்று கேட்கும் முன்னே முந்தி கொண்டு தன்னை அறிமுகப்படுத்தினான். “சோதி” என்று பேயரைக் கூறி கையை அவளிடம் நீட்டியவாறு நின்றான். மாதவி ஆண்களின் சகவாசத்தை வெறுத்தவள். “இருக்கட்டும், இருக்கட்டும்” என்று கூறி மீண்டும் அண்ணனைப் பார்த்து சினம் கொண்டாள்.

“அது இல்ல மாதவி…, சோதி என் ஃரென்டு, இங்க மூனு நாளு தங்கி கிராமப்புறத்த சுத்திப்பாக்கனுமாம் அதான்…” என்று மலுப்பியவாறு தயங்கி தயங்கி பேசினான் அண்ணன். கோபத்துடன் ‘படார்’ என்று வாசல் கதவை அடைத்தவாறு உள்ளே சென்றாள் மாதவி. “அட விடுங்க சின்ன பொண்ணு, எதோ தெரியாம…” என்று சொல்லிக்கொண்டு சோதி, தன் நண்பனை ஆறுதல் கூறியவாறு, அவனும் ஆறுதல் அடைந்தான். இருவரும் வீட்டுக்குள் புகுந்தனர்.

சோதி தன் குளியலை முடித்து, மதியம் உணவிற்குத் தயார் ஆனான். காலை மடக்கி தரையில் அமர்ந்தான். அண்ணன் வந்தமர்ந்ததும் வாழை இலையை விரித்தால், சாதம் பரிமாறுவதற்கு. “உங்க பேரு நீங்க சொல்லவெ இல்லையே” என்று உசுப்பினான் சோதி. “நான் பொறந்ததிலிருந்து எங்க அம்மா பேரு வைக்கலேங்க” என்று திமிராட்டம் பதில் சொன்னாள் அவள். “மாதவி, வீட்டுக்கு வந்தவங்கல இப்படியா கவனிக்கிறது,” என்றார் அண்ணன்.

ம்….ம்… என்று முகத்தைச் சுளித்தவாறு சாப்பிட அமர்ந்தாள் மாதவி. எதையுமே பொருட்படுத்தாது, கோபத்தில் இருக்கும் மாதவியின் அழகை இரசித்தவாறு, “ஓ… உன் பெயர் மாதவியா???” என்று மணதில் இரசித்தவாறு உணவை இருசித்தான் சோதி. சிடு சிடு வென மாதவி அவன் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்தாள். அண்ணனும் அவர்களைப் பொருட்படுத்தாது போல் இருந்தார்.

சோதியின் பொழுதோ, காலையுணவு முடிந்ததும் தன் நண்பனுடன் சேர்ந்து கிராமத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்று விடுவான். பொழுதானதும் வீடு திரும்புவார்கள். மாதவியுடன் சோதிக்கு வாக்குவாதம் ஏற்படும், அதைக் கண்டு இரசித்தவாறு இருப்பார் அண்ணன். இப்படி இரண்டு நாள் கழிந்தது. சோதியின் வேலையும் முடிந்தது.
காலையில் சோதி ஊருக்குக் கிளம்புகிறான். அதற்கிடையில் எப்படியாவது அவன் இரதியிடம் மலர்ந்த காதல் நினைவுகளைக் கூறிடவே வேண்டும் என்று இருந்தான். எடுத்தான் காகிதப் பேனாவை எழுதினான் அவன் காதலை வர்ணித்து ஒரு கவிதையை.
என் மனதில் மலர்ந்த ரதியே
என் கவிக்கு நீ தான் பாரதியே
உன்னை நேசிக்காமல் இருக்க முடியவில்லை
என்னை நேசிக்க உனக்கு தெரியவில்லை
உன் மௌனம் வாசிக்க என்னால் முடியவில்லை
என் அன்பைச் சுவாசிக்க உனக்கு தெரியவில்லை
உன்மேல் காதலென சொல்லிட ஒரு தயக்கம்
மறுத்தால் என்னாகுமோ என்பதில் ஒரு நடுக்கம்
உன்னை பார்த்துப் பேச வேன்டும் என்ற ஏக்கம்
உன்னை கண்டவுடன் வருகிறது பதற்றம்
இனி என்னை நான் ஏமாற்றுவதாக இல்லை
போதும் உன் காதலின் போராட்டம்
என் இதயம் காத்திருக்கும் உந்தன் அண்பின் சூதாட்டம்
போதும் முடித்திடு என் காதலின் திண்டாட்டம்

மறுநாள், சூரியன் எழும் முன்னே, சோதி எழுந்தான். கண்னைக் கசக்கியவாறு, காலை கடனுக்குக் கழிவறைக்கு விரைந்தான். எல்லாம் முடிந்து அறைக்கு விரைந்தான், அங்கு மாதவியின் கையெழுத்தில் மலர்ந்த ஒரு மடலைக் கண்டு வியந்தான். அதில்…
“ வந்தா போ நீ கழிவரைக்கு…
செத்தா போவாய் கல்லரைக்கு…
இன்னிக்குச் செத்தா நாளைக்குப் பாலு
வீணா தேடாதே என் கையில சாவு
இப்படிக்கு உன் மனதில் மலர்ந்த ரதியும் அல்ல
உன் கவிக்கு நான் பாரதியும் இல்ல
நீ எதிர் பாக்கிற ஆள் நான் இல்ல
எங்க அண்ணன் எனக்கு வைத்த பேரு
மாதவி”.

மாதவியின் பதிலைப் படித்து சிதைந்துப் போனான் மறுநாள், சூரியன் கதிர் வீட்டை நோக்கி சுலிர் என அடித்தது அதில் அண்ணன் எழுந்தான், சோதியும் புரப்பட விரைந்தான். போகும் முன் மாதவியிடம் மன்னிப்புக் கூறுவதற்கு ஏங்கினான். அவன் கண்கள் வீட்டை அலசியது. ஆனால் அவன் நேரம், மணியாவுதுடா இன்னும் என்ன செய்ற? என்று அவன் நண்பன் ஒரு புறம்.

ஏமாற்றத்துடன் அவன் காரில் ஏறினான். நேசித்த இதயத்தை மறக்க சொல்கிறாய் மறந்த இதயத்தை நேசிப்பதுதான் காதலா? நினைத்துப் பார்க்கிறேன், நீ மறக்க சொன்னதை உன்னை நான் மறக்க முடியாமல் அல்ல
என் நினைவுகள் உன்னைப் பற்றி. உன்னை காதலித்த பாவத்தை விட என்ன பாவம் செய்தேன் நான் காதலித்த பாவத்திற்கு, உன் நினைவுகளால் எனக்கு தினமும் ஆயுள் தன்டனையா? என்ற எண்ணங்களோடு வீடு திரும்பினான் சோதி. மாதவியோ அவன் எழுதித்தந்த காதல் கீதத்தை ஒரு பெட்டியில் போட்டுப் பூட்டீனாள். காகிதத்தைப் பெட்டியில் அடைத்த அவள், சோதியின் நினைவை அடைக்க தவறிநாள். பரிதாபம் மாதவியின் நிலமை, பாசம் இல்லாமல் வாடுகிறாள் வறுமையில். தோழி என்ற பெயரில் சில பேர். காதலித்துதான் பாரேன் என்று மூட்டி விடும் பல பேர்.

கண்டவுடன் காதலில் இவளுக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாளும் அவன் மீது உள்ள ஒரூ வீநோதமான உணர்வு அவளை உறுத்தியது அவள் மனதோ உருட்டியது. வரட்டும் அண்ணன் அவரிடம் விசாரிப்போம் என்ற முடிவில் வீட்டு வேலைகளைச் செய்ய தொடங்கினாள். அந்தி சாய்ந்தது, அசதியோடு வீடு திரும்பிய அண்ணன், அவரின் அறையில் சென்று அமர்ந்தார். வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தீங்கள உங்க ஃவரென்டு அவன் யாரு? எங்க இருக்கான்? என்று வினவினாள் மாதவி. திடுக்கிட்டு எழுந்தான் அண்ணா. ”ஏன் மா? அவன் நம்ப பள்ளியில தான் பயின்றான். இரண்டாம் ஆண்டு வரை இங்கு தான் இருந்தான். உனக்கு நினைவு இருக்கா, அண்ணன் கூட அடிக்கடி அவன் வீட்டுக்குப் போயிடுவென்”.

மாதவி நினைவலைகள் 15 வருடங்களுக்குப் பின் நோக்கி சென்றன. அப்போது மாதவிக்கு வயதோ 8. கல்விக்குப் பள்ளிக்குச் செல்லும் வயது. வறுமையின் காரணமாக நடந்து செல்வாள். துணைக்கு அவன் அண்ணன், தொண தொண வென அண்ணனின் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் தான் சோதி என உணர்ந்தாள். சோதியின் தந்தைக்கு வேளை மாற்றக் காரணத்தால் அவிட்த்தை விட்டு வெளியேரியது நினைவுக்கு வந்தது. என்னதான் சோதி அதிகம் அரட்டை அடித்தாலும், மாதவிக்கு அவன் மீது ஒரு கண் இருந்தது. அந்தப் பிஞ்சு மனதிலும் ஒரு ஆசை இருந்தது, உண்மைதான் என அவள் மனசாட்சியுடன் ஒப்புக் கொண்டாள்.

இப்போது என்ன செய்வது… நீ என்னோடு இருந்த நேரமெல்லாம் நான் இறுமாப்புடன் இருந்து விட்டேன், நீ என்னை பிரிந்த நேரம், உணர்கிறேன், என் உயிர் உன்னிடத்தில் உள்ளதை. ”அண்ணா அவர் திரும்பவும் எப்பொ வருவார். வருவார் தானே?”. என்று அண்ணனிடம் வினவினாள். என்ன மா, சோதி மேல் உனக்கு ஒரே காதலோ… என அண்ணன் கெட்க, மாதவி வெக்கி குனிய, அண்ணன் சிக்கி சிதைந்தான். அண்ணன் புரிந்துக் கொண்டான். திருமணம் வயதாகியது மாதவிக்கு. அவள் விருப்பப் படி சோதியைத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தான். மேலும் சோதி இவனது நெருங்கிய நண்பன், நன்கு அறிந்தவன்.

மாதவியின் முழு சம்மதத்துடன் சோதியைக் காண அவன் ஊருக்கு புறப்பட்டான். அவன் ஊர் இரயிலில் பயினித்தால் 2 மணி நேரம் தான். சோதியைப் பார்த்து விட்டு அவனைக் கையோடு வீட்டுக்கு அழைத்து வருவதாக கூறினார் அண்ணன். மாதவி மணதில் வண்ணத்துப் பூச்சிகள் சிரகடித்து பறந்தன. வீட்டு வாசலிலே இடதும் வலுதுமாய் அலைந்து திரிந்தாள். ஒரே பதற்றம் அவளுக்கு. வீட்டு சுவரில் கடிகாரம் இருந்தும், தன் கை கடிகாரத்தில் மணியைப் பாத்துக்கொண்டே வாசலில் இலவுக் காத்த கிளிப் போல காத்திருந்தாள்.

மணியாச்சு அண்ணன் இன்னும் வரலேயே என்ற பதற்றம் அவளை மேலும் பதற வைத்தது. நொந்து போனாள். வெந்த புண்ணில் வெண்ணீர் ஊற்றியது போல் இருந்தது அந்நேரம் அவளுக்கு. அப்போது தட தட வென கதவு தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள் மாதவி. வரேன் அண்ணே என்று கூறியவாறு கதவைத் திறந்தாள். மேலும் ஓர் அதிர்ச்சி. அண்ணன் மட்டும் மழையில் நணைந்து நெளிந்து, இருந்தார். ”ஏன் அண்ணே என்னா ஆச்சு?” அட போ மா… இன்று நேரமே செரியில்லை என்று சலித்தவாறு குளியல் அறைக்குச் சென்றார் அண்ணன்.

என்ன ஆச்சு… இவருக்கு. போன காரியம் எதாவது தடங்களோ? என்று குழம்பிக் கொண்டிருந்தால் தன் மனதைத். திடீரென தொலைபேசி ஒலி மாதவி செவிக்கு எட்டியது. விரைந்தாள், ஹலோ.. மாதவி பேசுறேன் நீங்க என்று அறிமுகத்துடன் பேசினாள். அவள் சோதியின் குறலுக்கு எதிர்ப் பார்த்து காத்திருந்தாள். ”ஏங்க இது மாதவன் வீடுங்களா?” ”ஆமாம் எங்க அண்ணன் அவரு” என்று மாதவி கூற. ”அம்மா உங்க அண்ணன் போன இரயில் விபத்துக்குள் ஆச்சு. ஆள் அடையாளம் காண முடியில. உடல் துண்டித்து போச்சு மா… அதான் தகவல் சொல்லெ அடிச்சேன். வீட்டுக்கு சொல்லிடு மா… சீக்கிரம் வந்திடுங்க”. என்று கரடு முரடான குரலில் ஆடவர் ஒருவர், கூறி தொலைபேசி துண்டித்துப்போனது.

என்ன செய்வாள் மாதவி. யாரும் இல்லாத பாவி அவள். இருந்த ஒரே ஒர் அண்ணன், அவரும் இல்லையென்றால் வாழ்வது வீண் என்று எண்ணம் கொண்டாள். சிறு வயதிலேயே வாழ்க்கை முடிய வேண்டுமா கண்களை மூடினாள் இறைவனிடம் வேண்டினாள். என் அண்ணனிடம் நிறைய சண்டையிட்டிருக்கிறேன், திமிராட்டம் நடந்துருக்கேன், அப்போ எல்லாம் ஒரு வித சலிப்பு இல்லாமல், என் தங்கச்சி என்று சொல்லுவாரே. இப்போ கூட என் கல்யானம் விஷயமா தானே போனிங்க. ஐயோ இராமா.. அனியாயம் ஆக என் அண்ணன் நான் கொன்று விட்டேனே, என்றெல்லாம் எண்ணி அழுது புலம்பினாள்.

அப்போ வீட்டுக்கு வந்தது அண்ணன் இல்லையா? குளியல் அறையில் குளிப்பவர் யாரு? அதிகரித்தது அவளின் பயம். இறைவா ஒரு பெண்ணுக்கு இப்படியொரு சோதனையா, இறைவனிடம் பிராதித்துக் கொண்டே குளியில் அறை கதவை தட்டினாள், அண்ணா என்று. ”வந்துத்தேன் மா, என்ன உனக்கு அவசரம்” என்றவாறு கழுத்தில் ஒரு துண்டுடன் அறையிலிருந்து வெளியே வந்தான். பேய் அறைந்தாற் போல தென்பட்ட மாதவியைப் பார்த்து, ஏன் மாதவி முகம் எல்லம் வாடி போயி இருக்கு, சோதிய கூட்டிட்டு வரலேன்னு கோபமா? என்று வினவினார்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்தவாறு, ”அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை” என கூறினாள். அண்ணனா இல்லை ஆவியா என்ற குழப்பம் அவள் மனதில். முதலில் என்னால சோதி ஊருக்குப் போக முடியில, என தன் கதையைச் சொல்ல தொடங்கினார், அண்ணன் வடிவத்தில் இருக்கும் ஆவி. ‘டிக்கெட்’ வாங்க வரிசை நிக்கிரப்ப ஒருத்தன் என் பைய திருடிட்டான். அதில தானே என் பணம் எல்லாம் இருந்தது. அப்படியே போச்சு, என சோகமாகக் கூறி சாதத்திற்கு தரையில் அமர்ந்தான் அவர். ”அப்புறம் என்ன ஆச்சு அண்ணன்”, என கேட்டு, விபதுக்குள் ஆணவர் வேரு ஆடவர் என்று பெரும் மூச்சு விட்டாள் மாதவி.

”அப்படியெ வந்துத்தேன் வீட்டுக்கு, வருகிர வழியில் பெரும் மழை. கையில் குடையில்லாத காரணத்தால் மழைக்கு ஒதுங்கி நின்று வரவேண்டியதாகப் போச்சு. அதான் தாமதம்”, என்று அண்ணன் கூறிய கதையைக் கேட்டு தெளிவுற்றாள் மாதவி. நீ ஒன்னும் வருத்தப் படாத அம்மா, அண்ணன் நாளிக்கு போயி மச்சான் கிட்ட பேசுறேன் என்று கூறி இரவு உணவைத் தொடங்கினர். ”ஆமா, நான் குளிக்கும் போது யாருகித்த ஒப்பாரி வெய்த்துக் கொன்டிருந்த”, என அண்ணன் வினவினார், அது ‘ரோங் நம்பர்’ அண்ண”, நீங்க சாப்பிட்டு படுங்க, என கூறி மறைத்தாள், நடந்த உண்மையை. உணவுக்குப் பின் இருவரும் உறங்க சென்று விட்டனர்.

வழக்கம் போல் மாதவி காலையிலேயெ எழுந்து விட்டாள். அங்கே சோமதி அண்ணன் அறையிலிருந்த்து வெளியேரியதைக் கண்டு, ”நீங்க எப்ப வந்திங்க” என்று வினாவோடு சோதியிடம் செய்கித்தாள். சோதியோ தயங்கிய வாறு அவள் முன் நிற்க, அவன் கையில் இருந்த காகிதத்தைக் கண்டு திடுகிட்டாள் மாதவி. சோதியோ அவளிடம் காகிதத்தை நீட்டியவாறு கழிவறைக்கு விரைந்தான். மடலை வாங்கிய மாதவி ஒன்னும் புரியாமல் திறந்து படித்தாள், அதே போன்ற கவிதை மீண்டும் சோதி ஏன் எனிடம் கொடுக்கிறார் என கேள்வியோடு விரைந்தாள் அவள் அறைக்குத், திறந்தாள் அவளின் பெட்டியை. அதில் கடிதம் இல்லை.

அப்போதுதான் அவளுக்கு, புரிந்தது. தான் கண்டது கனவு என்று. ஆனால் இதில் மர்மம் என்னவென்றால், அவளின் கனவில் வந்த அனைத்து காட்சிகளும் அப்படியே நடப்பதை அவள் உணர்கிறாள். தன் கண்ட கனவுக்கும் நடக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு உண்டு எனப் பேனாவை கையில் எடுக்கிறாள், சோதிக்கு பதில் எழுதுகிறாள்.
என்ன என்று எழுதிருப்பாள்?

எழுதியவர் : நா. ஆ. கிசன்ராஜ் (7-Jan-16, 12:09 am)
பார்வை : 269

மேலே