என்னை தொடரும் உன் நினைவுகள் 555

உயிரே...

தினம் தினம் நான் உன்
நினைவுகளோடு உறங்குவதால்...

கனவுகள் பல வந்து செல்லுதடி
என் உறக்கத்தில்...

நாம் கைகோர்த்து
நடப்பது போன்றும்...

என் தோளில் நீ
சாய்ந்திருப்பது போன்றும்...

நீ என்னோடு சிரித்து
பேசுவது போன்றும்...

தினம் தினம் என் உறக்கத்தில்
உன் கனவுகள்தானடி...

கனவுகள் கலைந்துவிடும்
என்று தெரிந்தே காண்கிறேனடி...

நீ என் காதலை
ஏற்காத போதும்...

என்னை காணும்போது மட்டும்
நீ நலம் விசாரிபப்து ஏனடி...

அதனால் என்னவோ உன் நினைவுகள்
என்னை தொடருதடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-Jan-16, 8:49 pm)
பார்வை : 652

சிறந்த கவிதைகள்

மேலே