மனிதம் விதைத்த மழை ---- வெண்கலிப்பா
மனிதத்தால் பொழிகின்ற மனிதநேயம் மழைநீராம் .
புனிதத்தால் வரமாகிப் புவிமீதுப் பொழிகின்றாய் .
கனிவானச் செயலன்றோ ! காசினியும் பெருமைபெறும் .
பனிபோன்றுப் புகுகின்றாய் பகலாகித் தெரிகின்றாய் .
நிறைவாக உதிக்கின்றாய் ; நிலம்நோக்கி வருகின்றாய் .
இறையான்மை நெறிகளையும் இனிமையுடன் புகல்கின்றாய் .
மனமெல்லாம் நிறைகின்றாய் ; மனிதத்தைக் காக்கின்றாய் .
சினமெல்லாம் தவிர்த்துநீயும் சிறப்புடனே இருந்திடுவாய் .
உறவாக நமையெண்ணி உயிராக நினைத்திடுவாய் .
மறவாது மனிதத்தை மனத்தினிலும் பதித்திடுவாய் .
குணமான நலமனைத்தும் கொடுத்திடுவாய் வளங்களையும்
பணிவாகத் தொழுகின்றோம் பகுத்துநீயும் பொழிந்திடுவாய் .
புனிதமான உனைநாங்கள் புவிதனிலே வணங்கிடுவோம் .
மனிதத்தால் விதைத்திடுவாய் மழை .