முந்திக் கொள்கிறாய்
எனது வட்டத்திற்குள்
நீ..
வரும் போதெல்லாம்
பரபரக்கிறது என் இதயம்
எப்படியும் உன்னை
சிறைப்படுத்திவிட !
உனது கரங்களில்
நீ..
மறைத்தே வைத்திருக்கிறாய்
எப்போதும் ..
எனக்கான
அருமருந்தை !
தேவையான அமுதத்தை
நீ ..
சுரந்தே வைத்திருக்கிறாய்
என் நியாயமான
தேவைகளின் எல்லைகள்
விரிகின்ற போது!
விஷப் பரிட்சைகளை தான்
நீ..
எனக்கு வைக்கிறாய் ..
உனதருள் கிடைக்க
நான் உகந்தவன்தானா
என்று பார்க்க ..
விட்டுக் கொடுப்பதே இல்லை
அதில் எப்போதும் !
எனது தேடல்களில் ..
நீ..
முந்திக் கொள்கிறாய்
என்னை சிறைப்படுத்த..
அதுவே உன் அருள்
என்று சொல்லி
சிரிக்கிறாய்!