காதல்

ஓரவிழியால் நீபார்த்தால் - என்
உயிர்வரைக்கும் நடுங்குது
உள்சென்ற மூச்சுக்காற்றும் -ஏனோ
வெளிவராமல் முடங்குது ...

பார்வையிலே என்னைநீ - நித்தம்
பந்தாடியது போதும்போதும்
பக்கம்வந்து வெக்கம்தா - என்
துக்கமெல்லாம் தூக்கிலேறும்

என்னுடம்பு முழுவதும் - அன்பே
உன்னுதட்டை பச்சைகுத்து
உன்னுடைய எச்சைவிட - இந்த
உலகத்தில் ஏதுசத்து ...

நித்தம்ஒரு முறையேனும் - உன்
நிழல்உரச நடந்துபோ ...
கோபத்தோடு பார்த்தாவது - என்னை
கெஞ்சம்பார்த்து கடந்துபோ ...?

நித்தம்நீ வரும்வழியில் - நான்
நின்றுநின்றே சிலையாகிறேன்.....
கூடங்குளம் உலையாகிறேன்
...

எழுதியவர் : மாரி சிவா (13-Jan-16, 3:19 pm)
பார்வை : 114

மேலே