வக்கிர குணம் கொண்டவர்கள்
காளை மாட்டை தொட்டதில்லை,
ஒரு பிடி தீவனம் கொடுத்ததில்லை,
ஒரு முடக்கு தண்ணீர் கொடுத்ததில்லை,
இவர்கள் விலங்குகள் நல அமைப்பாம்!
தன் சுய விளம்பரத்திற்காக
பாமரன், விவசாயிகள் வயிற்றெரிச்சலை
கொட்டிக்கொள்பவர்கள்.
ஒரு நாளைக்கு 300, 400 செலவு செய்து
தான் உண்ணாவிட்டாலும்
தன் காளை வயிறார உண்ண செய்பவன்
தன் பிள்ளை போல் வளர்ப்பவன்
அதை வதைப்பானா?
மேடை ஏறி வாய் சவுடால் பேசி
தன் சுய விளம்பரம் தேடும் இவர்களுக்கு
பாரம்பரிய விளையாட்டான
ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு எப்படி தெரியும்?
அன்றாடம் வண்டியிலும் வயல்வெளியிலும்
வேளை வாங்குவது வதையல்ல,
வருடம் முழுவதும் வயிறு நிறைய கொடுத்து
கொழுக்க வைத்து
ஒரு நாள் அதனுடன் விளையாடுவது
மிருக வதையாம்!
பாமரன், விவசாயியின் ஒரு நாள் சந்தோசத்தை கெடுத்து,
அவன் வயிற்றெரிச்சலையும்
சாபத்தையும் வாங்கிக்கொள்ளாதீர்கள்!
விலங்குகள் நல பாதுகாவலர்
போர்வையில் இருக்கும் வக்கிர குணம் கொண்டவர்களே!