அன்பின் பண்புகள்

{{ அன்பு பொறுமையுள்ளது ,நன்மை செய்யும்,பொறாமைப்படாது,
தற்புகழ்ச்சி கொள்ளாது,இறுமாப்பு அடையாது !!! }}
ஆழமான பள்ளத்தில் நீ தவிக்கும் வேளையில்,
அறைகாசும் எதிர்ப்பாராது உடனே உதவி செய்யும்,
உதவி மறந்து ஒதுக்கிவைத்து நீ சிறந்தாலும்,
உன் உயர்வினையும் உள்ளம் மகிழ்ந்து வாழ்த்தும்,
உதறிதள்ளி நீ சென்ற பின்னும்
உன்னை நோக்கி தவித்திருக்கும்,
தேவை என்று கேட்கும் முன்னே,
தேவையறிந்து தாகம் தீர்க்கும்,
தீய வழியில் நடக்கும் வேளையில்,
தாயாக கண்டித்து சீர்த்திருத்தும்,
தோல்விகள் நீ தழுவ நேர்ந்தால்,
தோள் தந்து ஊக்குவிக்கும்,
எல்லாத் துன்பத்திலும் ஆறுதல் தந்து,
எல்லா இன்பத்தையும் இரட்டிப்பாக்கும்,
எல்லாம் அன்பிற்காய் !!!
என்றும் அன்புடன் ,
ச.அருள்.