தேர்தல் கனவு

தேர்தல் கனவு
கனவு. . . . . . . .!
கனவுக்கு அடையாளம் கொடுத்தவரே அப்துல் கலாம் ஐயா தான். . .!!
நீ தூங்கும் போது வருவது கனவு அல்ல
உன்னை எது உறங்க விடாமல் செய்கிறதோ
அது தான் கனவு என்றார். . .!
நானும் கண்டேன் விரைவில் நிஜமாகும் தேர்தல் என்னும் கனவை. . . .!!

தேர்தல் என்றால் ஏழைகளின் மனதில் ஒருவித மகிழ்ச்சி. . . .!
ஏன். . .???காரணம். . .
நூறு ரூபாயும் கோட்டரும் தான். . . . .!!!
இதில் ஆரம்பமாகிறது லஞ்சம்,
லஞ்சம் வாங்காமல் என் மக்கள் வாக்களித்தால் நிஜமாகும் என் கனவு. . .!!
அவ்வாறு என் கனவு நிஜமாகையில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் காணாமல் போய்விடுமே. . . .!!

அரைகுறை மருத்துவன் ஆளைக் கொல்கிறான். . . .
ஏன். . . .????காரணம். . .,
தான் கொடுத்த லஞ்ச பணத்தை திரும்ப எடுக்க. . .!!
உறங்காமல் கஷ்டப்பட்டு உழைத்து நல் மதிப்பெண் வாங்கிய மற்றொரு தோழன்,அவன் வீட்டுக்கு காவல் காக்கிறான். . . . .!!
திறைமைக்கு முன்னுரிமை
கொடுத்தால் நிஜமாகும் என் கனவு. . . . . !!!

மதுவை ஒழிக்க போராட்டத்தில் ஈடுபட்ட பல உத்தமர்களை கைது செய்தார்களே. . .!!
ஆனால். . . .
இன்று,
எம் சகோதரியை பலாத்காரம் செய்தவன் நிமிர்ந்து உலாவுகிறானே. . .!!
நேர்மையான நீதி வழங்க நல் நீதிபதிகள் இருந்தால் நிஜமாகும் என் கனவு. . . .!!!
இலவசம் என்றவுடனே ஒருவித ஆசை வருகிறதே நமக்கு. . . . .!!!
நண்பா. . . . .
தரம் அற்றவைகளை தானே நமக்கு தள்ளிவிட்டார்கள். .!!!
பயிர்க்கு வேலி போட்டால் அவ்வேலியே பயிரை மேயலாமா . . .!!!

சில தினங்களுக்கு முன் வெள்ளத்தில் தத்தளிக்கையில் எட்டி பார்த்தேனே. . . . .!!!
நான் வாக்களித்த ஆட்சியாளர்கள் யாரையும் காணோமே. . . . !!!
தோள் கொடுத்தது எம் தோழர்கள் தானே. . . . .!!!
இப்பொழுது நான் கண்ட கனவை முன்னரே கண்டிருந்தால்,
குளங்கள் மறையாமல் இருந்திருக்குமே. . . !!!
மழையைக் கண்டு நாம் ஒளிந்திருக்க வேண்டாமே. .!!

நான் கண்ட கனவை எத்தனை பேர் கண்டனரோ. .!!
எண்ணங்கள் ஒன்று கூடி எங்கள் கனவு நிஜமாகும் விரைவில். . . !!
காமராசரின் ஆட்சி காலமாக மாற வாழ்த்துங்கள் என் கனவை. . . .!!

எழுதியவர் : இரா.ஸ்ரீ வைதேகி. (14-Jan-16, 8:40 pm)
சேர்த்தது : இராஸ்ரீ வைதேகி
Tanglish : therthal kanavu
பார்வை : 90

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே