பொங்கல்

"பொங்கல் பண்டிகை "



இயற்கைக்கும்
இயற்கையாய் இருக்கும்
இறைவனுக்கும்
இறைவன் படைத்திட்ட
இம்மண்ணில் விண்ணில்
இருக்கும் அனைத்து உயிர்களுக்கும்
நன்றி சொல்லும்
நான்கு நாள் பண்டிகையாம்..



அதில் மும்மாரி தந்து
போகத்தையும் தரும்
இந்திரனுக்கு நன்றி சொல்லும்
இந்நாளில் பீடைகள் ஒழிக்கப்பட்டு
மங்கள வாழ்வுதனை
மகிழ்ச்சியோடு வரவேற்க
மக்கள் தயாராகும் "இந்திர விழா" எனும்
போகி முதல் நாளாம்



ஒளியின் வடிவாகி
மக்களை காக்கும் மகேசன்
சூரிய நாராயணனுக்கு
சூரிய வழிபாடு எனும்
"மகர சங்கராந்தி" அதற்கு
அடுத்த நாளாம்



உழவுத் தொழிலுக்கு
உறுதுணையாக விளங்கும்
ஆவினத்திற்கு வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் சலங்கை கட்டி.
கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்தி
திருநீறுபூசி குங்குமத் திலகமிட்டும்
புதிய மூக்கணாங் கயிறு,
தாம்புக் கயிறு அணிவித்து
ஆவினத்திற்கு நன்றி சொல்லும்
"மாட்டுப் பொங்கல்" அதற்கு
அடுத்த நாளாம்


காண்பவரையும்
கண்ணில் தென் படுபவரையும்
உறவினரையும்
உரிமையோடு நலம் பகிர்ந்து
பொழுதை போக்கி
நன்றி தெரிவித்து விடைபெறும்
காணும் பொங்கல் (அ) கணுப் பண்டிகை
கடைசி நாளாம்..!

தித்திக்கும் தினம்
திருவிழா நாளோடு முடியாமல்
தினம் தித்திக்கட்டும்
என சொல்லி
அனைவருக்கும் என் இனிய பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்.!

அன்புடன்
கா.சக்திவேல்

எழுதியவர் : sakthisindhu (14-Jan-16, 7:27 pm)
Tanglish : pongal
பார்வை : 421

மேலே