இனியதோர் இல்ல அறம்
விரலிடை மோதிரங்கள் பரிமாற....
விழியிடை உணர்வுகளை பரிமாற...
என்னிரு விழிகளில் வழிந்திடும் காதலை
உன்னிரு கரங்களில் நீ ஏந்த...
மஞ்சளிலும் மாலையிலும்
மையல் கொள்ளும் வேளையிலும்
என் முகம் உனை சேர
உன் முகம் எனை சேர
மந்திரங்கள் ஓதிட
என் மார்பினில்
நான் உனை சேர்க்க
தன்னிலை மறந்தே
தலைக்கணம் மறந்தே
என் பாதங்களில்
நீயே உனை சேர்க்க....
தமக்கை என மகளென
நான் கொண்ட நிறம் மாறி
தாய் என தாரம் என நீ எனை சூடிட...
எனக்கென நீ என சுயநலமும்
உனக்கென நான் என பொது நலமும் ஒன்றாய் இணைந்திட..
இனிதே நுழைந்தது நம் இல்லத்தில் இல்லறம்..