வேட்டைக்கு போனவர்கள்
மானின் தோலில்
அழகான புள்ளிகள்
அதன் எண்ணிக்கை
எத்தனை ?
மானின் கண்களில்
ஆடம்பர வசீகரம்
அதற்கு
மை வைப்பதா .....
நெய் வைப்பதா ....
மானின் காதில்
சிரிதாய் ஓர் உயிரினம்
அது
சைவமா ?
அசைவமா ?
ஓர் ஆராய்ச்சி
நடக்கிறது
இத்தனைக்கும்
இவர்கள்
மான் வேட்டைக்கு
வந்தவர்கள்