இயற்கையின் பரமபதம்
முந்தைய யுத்தம் ஒன்றில் காடுகளை அழித்து
விலங்குகளைத் துரத்திக் குடியேறிய பின்,
அவ்வப்போது
நியாயம் கேட்கவரும்
விலங்குகளையும்
வெடிவைத்து விரட்டிவிட்டோம்,
பிந்தைய யுத்தம் ஒன்றில்
குளங்களை அழித்துக் குடியேறிய பின்
நியாயம் கேட்க வந்த தண்ணீரானது
நம் பயம் அறிந்து
இப்போது நின்று பழிதீர்க்கிறது,
இதைக் காடுகளை இழந்த விலங்குகள்
பார்த்துக் கொண்டிருக்கின்றன...