சொல்லாத காதல்

என் இதயத்தின் கணம் ரணம்
வானில் கசியும் நீர் வழி
கணமும் ஜனம் நுகர வேண்டாம் ..
மழையே நீ கொஞ்சம் மறைந்துகொள்....
என் வதனம் போர்த்திய சோகம்
மாலையில் சோர்ந்த இலை வழி
பகுதியும் பாசங்கள் அறிய வேண்டாம்..
பகலே நீ இன்னும் நீண்டு கொள்..
சலசக்கும் என் மன ஓட்டத்தின்
எண்ணமும் அது சொல்லும் வண்ணமும்
மக்கள் மதி கேட்க வேண்டாம்..
ஓடையே சற்று உறங்கிக்கொள்..
இதயத்தில் மறைத்த எதோ வொன்று
இனியவனிடம் பகராத அந்தவொன்று
இயற்கையே யாரிடமும் மொழிதல் வேண்டாம்..
என் ஏக்கம் மறைத்து உன்எழில் மட்டும் காட்டிக்கொள்....