என் அம்மா
உலகில் நாம் எதிர்பார்க்காமல் கிடைத்தப் பரிசு!!!
நாம் விடும் முதல் மூச்சு
நாம் பேசும் முதல் மழலைப் பேச்சு
மண்ணில் பதியும் மெல்லிய பாதத்தின் அச்சு...
தன் உயிரின் மறுவடிவைப் பார்த்து வியந்து
தன் உயிரையும் விட துணிவாள் மகிழ்ந்து!!!
வழிகாட்டும் சிறந்த ஆசானாய்...
அறிவுரைக் கூறும் வேளையில் தந்தையாய்...
என் இன்பத் துன்பங்களைப் பகிரும் பொது தோழியாய்
எல்லாச் சூழலிலும் உடன் இருக்கும் துணையாய்
நான் கண் கசியும் வேளையில் உடன் வருந்துபவளாய்...
தவறு செய்கையில் கண்டித்து அறிவுறுத்தி திருத்துபவளாய் இருப்பாய்...
அழகிலே தாஜ்மஹலையும் மிஞ்சும்...
வற்றாத கங்கை நதியே !!!
இமய மலையின் உயரமும் குறையும்...
உனது அன்பின் முன்னே!!
பாசம் பொழியும் உன் விழி...
இவ்வுலகில் என்னை வியத்த பெண்மணி...
உன்னைப் போன்று ஒருவர் உடன் இருக்க
நான் எதையும் ஜெயிக்க...
தடைகள் ஏதும் இல்லை எதிர்க்க...
என் வளர்ச்சியைக் கண்டுப் பூரித்து
நம்பிக்கையுடன் ஊக்கமளித்து...
எந்தன் நிழலாய் வருவாய் தொடர்ந்து!!!
உந்தன் உலகமாய் நான் மாறினேன்...
நீ இருக்கையில் தனிமை இல்லை என்றேன்...
மீண்டும் மழலையாய் மாறி
உன் மடியில் தவழ
வரம் வேண்டி நின்றேன்!!!
நான் உச்சரித்த முதல் வார்த்தை அம்மா...
உனக்கு நிகர் எதுவும் இல்லை அம்மா...
துயரங்களிலும் இனிமையானத் தருணங்களிலும்
என் உதடு ஒலிக்கும் மந்திரம் அம்மா!!!
உன் ஆசையை நிறைவேற்ற
நான் பாடுபட்டு வெல்ல ...
தடைகளை எதிர்த்து நடக்க
துணைப்புரிந்து உடன் நீ இருக்க
எதையும் சாதிப்பேன் அம்மா!!!