ஒன்றான ஒன்று

நீ ஒன்று!!!
உன் நிலை ஒன்று!!!
வாழ்வொன்று... வழியும் ஒன்று!!!

உன்னுள் ஒன்றாய்
அரும்பும் உணர்வொன்று!!!

மனம் ஒன்று!!!
இந்தக்கணம் ஒன்று!!!

ஒன்றில் ஒன்றிய
உயிர் நீ...

நன்றில் நனைந்த
நதி நீ!!!

பலவாய் பரவிய பலவும்
ஒன்றாய், உருவாய்
உருவில் மருவி
மறுவில் மயங்கும் மயக்கம் நீ!!!

இந்த மயக்கத்துயில்
மறக்கத்துணியும் மணி நீ!!

மறக்கத்துணி
இதை துறக்கத்துணி ஏனெனில்
நீ ஒன்று!!!
ஒன்றாய் உருவான ஒன்று!!! - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தரராஜன் (22-Jan-16, 5:22 pm)
சேர்த்தது : சௌந்தர்
Tanglish : onraana ondru
பார்வை : 214

மேலே