நானும் உனது கனவுகளும்
இறந்த கருவைச்
சுமந்து திரியும்
கர்ப்பிணியாய்
இன்னமும்
உன் கனவுகளுடன் நான் ....
மரண வீதியின்
வாழ்க்கை யாசகன்
உன்
காதல் நூலின்
கண்ணீர் வாசகன் ....
போர் நினைவுச் சின்னத்துள்
புதைக்கப்பட்ட
அடையாளமற்ற வீரனின்
அடையாளமாய்
இந்த போராட்ட வாழ்க்கைக்குள்
எனது காதல் ...
புதையுண்டு கிடக்கிறது .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
