திரைகடலோடும் வாழ்வில் பேஸ்புக் வாசஸ்தலம்

அம்மா,
அப்பா,
சொந்த பந்தங்கள்,
நண்பர்கள்
என்று
பேசி மாதக்கணக்காகி விட்டது.
இது ஒரு உச்சக்கட்ட தனிமை..
யாரிடமும் பேசாமல்..!

இருந்தும்
பேஸ்புக்கில்
என் வாழ்க்கை
எப்பவும் போல ஓடுது...
சொல்லப்போனால்,

சுற்றம் சூழ தனியே வாழ்ந்து,
தனியே சிரித்து,
தனியே அழுகிற ஒரு வாழ்வு,
திரைகடலோடி திரவியம் தேடும் இப்பொழுது..!

எழுதியவர் : செல்வமணி (25-Jan-16, 8:49 pm)
பார்வை : 105

மேலே