தேசிய_வாக்காளர்_தினம் - கற்குவேல் பா
இந்த வருடம்
" அம்மா வருவாரா ,
இல்லை
அப்பா வருவாரா " என்ற
கார சார
வாக்குவாதமொன்றில் - உள்ளே
குறுக்கிட்டு
" யார் வந்தாலும் - நமக்கு
குளிசாதனப்பெட்டியோ - அல்லது
சலவை இயந்திரமோ ,
இந்தமுறை
கிடைக்கப் போவது
உறுதியென்று "
சிரித்துக் கொண்டே நகர்கிறார் ;
அவர்களுள் ,
பதினெட்டு வயதைக் கடந்த
வாக்காளர் ஒருவர் !
~ பா . கற்குவேல்
#என்_ஓட்டு_விற்பனைக்கு_அல்ல
#தேசிய_வாக்காளர்_தினம்