வலை சொந்தம்

சொந்தங்கள் எல்லாம்
சந்தங்களானது வலைத்தளத்துக்குள்
கொஞ்ச நேரமும்
கைகளும்,வாயும்
கொள்ளவில்லை விடை
கொஞ்ச கூட நேரமில்லை
பேசும் உரையாடலின் நடுவே
பகிரும் இன்னொரு தகவல்
இடை இடை கைகள் தட்டும்
சுருக்க உரை
வாழ்த்துகள் கூட
முழுதாக கூற இயலாத
வார்த்தை சுருக்கத்தில்
வாழ்க்கை சுருக்கம்
சொந்தங்கள் விலக்கம்
தூரங்கள் பக்கமானதால்
பக்கம் பக்கமாய் பேசியவை
படங்களாகவும்,உணர்வுருக்களாகவும்
பரிமாற்றங்கள் நிகழ்ந்தன - ஆயினும்
பாசங்கள் பரிமாறப்படுவதில்லை
நேரில் கூறும் வார்த்தைகள்
முகத்தில் காட்டும் அன்புமே
நேசங்கள் வளர்த்திடும்
வாங்கும் லைக்குகளில் லயிக்கும் மனங்கள்
விரும்பும் மனங்களின் எதிரிகளாக்கிடும்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (28-Jan-16, 7:26 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : valai sontham
பார்வை : 166

மேலே