கலையே நீ

                கலையே நீ

கலையே நீ என்றாலும் சிலையே நீ என்றாலும்
கார்குழலே உனை மறவேன்
கலைஞன் ஆகிய பொன்சிலை பதித்து
வேய்குழலே உனை வடிப்பேன்

மலையே நீ என்றாலும் மலரே நீ என்றாலும்
பொற்குழலே உனை மறவேன்
கவிஞன் ஆகிய சொற்பொருள் பதித்து
வெண்குழலே உனை எழுதுவேன்

நதியே நீ என்றாலும் அருவியே நீ என்றாலும் வெள்ளி விழியே உனை மறவேன்
சிகரமாகிய உச்சியில் முகம் பதித்து வேல்விழியே உனை சேர்வேன்

விதியே நீ என்றாலும் சகியே நீ என்றாலும் கண்மணியே உனை மறவேன்
சிந்தனை மேலிட புதுமைகள் படைத்து நித்தமும் உனை நினைப்பேன்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (29-Jan-16, 4:58 am)
பார்வை : 136

மேலே