அழைக்கின்றோம் ஆசானே ஆறுதலும் பெறுவீரே ---- தரவு கொச்சகக் கலிப்பா
பிறக்கின்ற போதினிலே பிறழாது எழுதிவைத்தான்
இறக்கின்ற காலமோன்றே இயல்பான நடப்பென்று .
மறக்கின்ற நிலையில்லை மாறட்டும் மனத்துயரம் .
உறவாக நாங்களுமே உள்ளன்பால் அழைக்கின்றோம் .
முகம்பார்க்க முடியாமல் முழுமையாக ஆறுதலும்
அகம்பார்த்து நோக்கிடுங்கள் அத்தனையும் மாறிவிடும் .
சுகந்தன்னைத் தமிழன்னை சுகந்திரமாய் வழங்கிடுவாள் .
முகநூலின் பதிவுகளில் முகங்காட்ட வாருங்கள் .
அழைக்கின்றோம் ஆசானே அன்புள்ள நேசத்தால்
தழைத்தோங்கும் தமிழ்மொழியும் தணியாத தாபத்தால் .
உழைத்திடுவீர் தமிழன்னை உறவாக நின்றிடுவாள் .
அழைக்கின்றோம் ஆசானே ! ஆறுதலும் பெறுவீரே !