உனக்காக நானிருப்பேன்-2

தொடுதிரையாய் நானிருப்பேன் உன் முகம்
திரையில் விழும் என்றால்

நிழற்படவியாய் நானிருப்பேன் உன் அழகிய
முகத்தை பிடிக்க முடியும் என்றால்

மணியோசையாய் நானிருப்பேன் உன் பெயரை
இன்னிசையாய் ஒலிக்க முடியும் என்றால்

மின்வெட்டொளியாய் நானிருப்பேன் உன் கண்களை
கடந்து உட்புக முடியும் என்றால்

ஒலிவாங்கியாய் நானிருப்பேன் உன் கானக்குரலில்
என் பெயர் சொல்வாய் என்றால்

ஒலிப்பெருக்கியாய் நானிருப்பேன் உன் அன்பை
உரக்கச் சொல்ல முடியும் என்றால்

விசைத் தளமாய் நானிருப்பேன் உன் கோபம் தீர்க்க
எனைத் தட்ட முடியும் என்றால்

கூகுளாய் நானிருப்பேன் உன் தேடல்
நம் காதல் என்றால்...!!!!

எழுதியவர் : எழில் குமரன் (2-Feb-16, 11:28 am)
பார்வை : 322

மேலே