உறு பொருள்

என்னை முழுவதுமாய் அறிந்தாலும்
விளையாட்டாய் ஆரம்பிக்கின்றன வார்த்தைகள்
சொல் ஒன்றில் விஷம் ஒன்றை ஏற்றி
இதயத்தில் நுழைக்கிறாய்.
கடக்கும் காலமொன்று
கட்டளை இடப்பெற்று கட்டப்படுகிறது.
உனக்கான நாள் ஒன்றில்
மீன்களால் உண்ணப்பட்டு
காத்திருக்கும் எச்சங்களை
கைகளில் எடுத்துக் கொள்.
தேவைகள் அற்று கடலால் வீசி எறியப்பட்ட
பொருள்களில் எனக்கான நினைகளும் இருக்கலாம்.
இரண்டும் இணையும் தருணங்களில்
உனக்கான கண்ணீரில்
முழுமை அற்ற மரணத்தில் முழுமை அடைவேன்.

* உறு பொருள் - தியானிப்பவர்க்கு வந்து உறுவதாகிய பரம்பொருள். - திருமந்திரம் - 4ம் தந்திரம். 952

எழுதியவர் : அரிஷ்டநேமி (3-Feb-16, 10:10 am)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 160

மேலே