நாம் எங்கே போகிறோம்
நாம் எங்கே போகிறோம்?
ஜோதிடம் பார்த்து
நேரம் ராசி நட்சத்திரம் பார்த்து
நல்ல கிழமையில்
நல்ல நேரத்தில் ஐந்தாவதாய்
குழந்தை பிறந்தது
ஆண் குழந்தை என்றதும்
ஆயிரம் கனவுகளில் தந்தை
பெண் குழந்தை என்றதும்
தூரத்தில் ஒரு மூலையில்
ஆயிரம் யோசனைகளில்
நினைவு திரும்பிய வேளையில்
ஜோதிடர் சொன்னது ..
இந்த தடவை குழந்தை நிலைக்கும்
பிள்ளையில்லாக் குறை நீங்கும்
மஹாலக்ஷ்மி பிறந்தால் போஜனதுக்கும் தனத்துக்கும் குறையிருக்காது
ராமன் பிறந்தால்
உங்க குடும்பத்தைக் காப்பாத்துவான்..
இறுதியாக..
ஜோதிடத்தில் நம்பிக்கையற்றவனாக..
அய்யரே.. !
இப்போ என் மனைவிக்குத் துணையா...
குழந்தைய காப்பாத்த யார் வருவா?
பகவான் பார்த்துப்பான்
அவர எங்கே தேடுவேன்?
இப்படியாக
எதிர் நோக்க சில கேள்விகள்
எனக்குள்ளே
மனிதர்களின் பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையில்
வாழ்வா?சாவா?என்ற கேள்வியே..
எனை ஆட்கொண்டிருந்தது.
பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டியும்
வாழ்ந்த ஆண்ட மன்னர்கள் கதை இன்றும்
ஏடுகளிலும்
கல்வெட்டுகளிலும் கண்டு பெருமைப்படுகிறோம்..
இன்று
எங்கு பார்த்தாலும் மதுக் கடைகள்
இவைதான்
நாம் வாழ்ந்த அடையாளங்களா?
நாம் எங்கே போகிறோம்?