ராமன் மீது விளைவு
தமிழகத்தைச் சேர்ந்தவர் சர். சி.வி.ராமன். இவர் அறிவியல் அறிஞர். இவர் ஒளிவிலகல் பற்றிய ராமன் விளைவு என்பதை கண்டறிந்தவர்.
இவரின் கண்டுபிடிப்புக்காக பாராட்டு விழா ஒன்றை வெளிநாட்டில் நடத்தினர்.
அந்த விழாவிற்கு சர்.சி.வி.ராமனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று அவர் வெளிநாட்டிற்குச் சென்றார்.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ‘மது பார்ட்டி’ வைக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட நம் அறிவியல் ஆராய்ச்சியாளரான சர் சி வி ராமனுக்கு மதுவை ஊற்றி கொடுத்து குடிக்க சொல்லி வீம்பு செய்திருக்கிறார்கள் அவர்கள்.
சர்.சி.வி. ராமனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. அதனால், அவர்கள் வற்புறுத்தலை விடாப்பிடியாக மறுத்தார் சர் சி வி ராமன்.
அவர்களும் விடுவதாக இல்லை. உடனே அவர்களிடம் இவ்வாறு சொன்னாராம்.
“நான் உங்களுக்கு தண்ணீரின் மீது ராமன் விளைவை காண்பித்தேன்.
நீங்களோ, ராமன் மீது தண்ணீரின் விளைவை காண்பிக்க முயற்சி செய்கிறீர்கள்” என்றாராம்.
இதைக்கேட்டு விழா எடுத்தவர்கள் சிரித்த சிரிப்பில் அரங்கமே அதிர்ந்ததாம்!
**************************************