திருமணப் பொருத்தம் -- 2

பைக் ஒட்டியபடியே தங்களது ஆறு வருட அழகிய காதல் சித்திரத்தை மனதில் ஓட்டினான் ராம்.ராமின் கல்லூரி முதலாம் ஆண்டு வேதியல் லேப் மேட் ப்ரீத்தி. பார்த்த பத்து நொடிகளில் அவள் விழியில் விழுந்த ராம், இன்னும் மீள வில்லை. கொஞ்சம் குறும்பும் கொஞ்சம் பயமும் கலந்த பால் வடியும் முகம் ப்ரீத்தி. கல கல பேச்சு, களங்கமில்லா சிரிப்பு, கண் சிமிட்டும் அழகு என பெயருக்கு ஏற்றார் போல் பிரியமானவளாய் இருந்தாள் ப்ரீத்தி. வகுப்பறையில் எங்கு அமர்ந்திருந்தாலும், அவளை பல முறை பார்த்து ரசித்தான். வேதியல் லேப் கிளாஸ் காக ஆவலுடன் அனு தினமும் காத்திருந்தான். முதல் வருட விடுமறை நாட்களில் ப்ரீத்தியை பார்காத ஏக்கத்தால் சோர்ந்தே இருந்தான். அவளை நினைத்து உருகி உருகி தினமும் கவிதைகளும் கிறுக்கல்களும் எழுதினான்.ப்ரீத்தி தன்னுள் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை உணர்ந்திருந்த ராம், கல்லூரி இரண்டாம் ஆண்டு முதல் நாளே ப்ரீதியிடம் தன் கிறுக்கல்களையும் தன்னையும் சமர்பித்தான்.

“அழகே ப்ரீத்தி!!
என் மனமோ பருத்தி.
உன் பார்வை அதை கொளுத்தி
எரிகிறது அணையா தீ!!

நீ என் உயிரின் பாதி
உனக்கு புரியுமா என் கதி?
அடைந்தேன் உன்னிடம் சரணாகதி
என் காதலை ஏற்றுக் கொள்ளடி ரதி!!”
கவிதைகளை வாசித்த ப்ரீத்தியின் முகத்தில், வெட்கமும் ஆச்சர்யமும் ஒரு புது இளஞ்சிவப்பு நிறத்தை பூசியிருந்தது. நாணத்துடன் பேரழகியாய் ஜொலித்தாள்."என்னமா கவிதை எழுதற ராம்.நீ கவிதை எழுதுவன்னு எனக்கு தெரியவே தெரியாது" வார்த்தைகளை தேடியவளாய் பதில் உரைத்தாள்."நான் கவிதை எழுதுவேன்னு எனக்கே தெரியாது ப்ரீத்தி. உன்ன பார்த்த அப்புறம் தான் ரசனை, கவிதை எல்லாம் எனக்குள்ள இருக்கு ன்னு எனக்கே தெரியும். படிப்பு, அம்மா, அப்பா, கிரிக்கெட், நண்பர்கள் இத தவிர எதுவுமே தெரியாத சமத்து பையனா நான் இருந்தேன். நீ தான் என்னையே எனக்கே புரிய வெச்ச. நான் எவ்ளோ நல்லா படம் வரையறேன் தெரியுமா. இந்த லீவ் ல உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் நான். நாங்க ஒரு ஏரி க்கு குடும்பத்தோட போனோம். அந்த ரம்யமான சூழல், அழகிய ஏரி, சில்லென்ற காற்று..எல்லாம் உன்ன மாதிரியே அழகாவும் மனசுக்கு ஆறுதல் தரதாவும் இருந்தது. ஏரியின் சத்தம், உன் சிரிப்பா என் காதுல கேட்டுச்சு. நிஜமா".தன் காதலை கொட்டித் தீர்த்தான், கவிஞனாகவும் கலைஞனாகவும் உருவெடுத்திருந்த ராம்.

"நம்ப வீட்ல இத எல்லாம் சொன்னா ஒத்துப்பாங்களா?" என்று பயத்துடன் பதிலளித்தாள் ப்ரீத்தி. "வீடெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். உனக்கு என்ன பிடிச்சு இருக்குல.அது போதும்" என்று இறக்கை கட்டி பறந்தான் ராம். தினம் நூறு எஸ்.ம்.எஸ், கல்லூரி மரத்தடி நிழல், மைதான மணல் என்று அவர்கள் காதல் மலர்ந்தது. இருவருக்கும் சென்னையில் ஒரே நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

சென்னையிலும் அவர்கள் காதல் காவியம் தொடர்ந்தது. ப்ரீத்தியுடன் பேசிய பல கோடி உரையாடல்களும், அவளுடன் இருந்த ஒவ்வொரு நொடியும் பசுமையாய் பதிந்திருந்தது ராமின் மனதில். "ராம். நான் ரொம்ப லக்கி டா.உன்னோட இருக்கற ஒரு ஒரு நிமிஷமும் அவ்ளோ சந்தோஷமா மனசுக்கு நிறைவா இருக்கு. நான் உன் கூட இருக்கறப்ப ஒரு மகா ராணி மாதிரி, ஒரு தேவதை மாதிரி என்ன நடத்தற. எனக்கு வாழ்கையே சொர்கமா இருக்கு ராம். உன்னால நான் செத்ததுக்கு அப்பறமும் கண்டிப்பா சொர்கத்துக்கு தான் போவேன். ஏன் தெரியுமா?" செல்லமாய் ராமின் தோள்களில் சாய்ந்தபடி பேசிக்கொண்டிருந்தாள் ப்ரீத்தி. "என்ன ப்ரீத்தி, செத்ததுக்கு அப்பறம்னுலாம் பேசற. லூசா நீ?" கோவமாய் பாய்ந்த ராமிடம் "நீதான் டா லூசு. சொல்லறத முழுசா கேளு. ராம் ராம் ன்னு உன் பெயர தான தினமும் 108 தரவைக்கு மேல சொல்லிட்டும், மெசேஜ் ல ஸ்ரீ ராம ஜெயம் மாதிரி எழுதிட்டும் இருக்கேன். அத சொன்னேன் பா.எனக்கு சாகல்லாம் வேண்டாம்.நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் உன்ன எப்படி எப்படி எல்லாம் கவனிச்சுக்கணும் ன்னு நெறைய யோசிச்சு வெச்சுருக்கேன். உனக்கு பிடிச்சதேல்லாம் சமைக்க கத்துக்க போறேன். உங்க அம்மா அப்பா வ உன்ன விட நல்லா கவனிக்கணும். அவங்க தான எனக்கு பிடிச்ச ராம, இந்த உலகத்துக்கு கொடுத்தாங்க. அப்புறம் எனக்கும் கொடுக்க போறாங்க.என் வாழ்க்கைல உன்ன விட பெரிய பரிசு எதுவுமே இல்ல. அப்படி பட்ட கிபிட் அ எனக்கு தர போற உங்க அம்மா, அப்பா க்கு நான் என்ன வேணா பண்ணலாம்." மூச்சு விடாமல் பேசுவாள் ப்ரீத்தி.

"இப்படி எத்தனை எத்தனை அன்பும் காதலும் தழும்பி வழியும் உரையாடல்கள். இதை எப்படி நம் பெற்றோர்களுக்கு புரிய வைப்பது. சில விஷயங்கள் புரியறதுக்கு அதை நம்ம உணரனும்.காற்று, மழை இதெல்லாம் எப்படி உணர்ந்தா தான் புரியுமோ, காதலும் அன்பும் அதே மாதிரி தான்." என்று மனதில் நினைத்தபடி தன் காதலியின் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான் ராம். (தொடரும்)

எழுதியவர் : ரம்யா ரெங்கராஜன் (6-Feb-16, 12:24 am)
சேர்த்தது : ரம்யா ரெங்கராஜன்
பார்வை : 427

மேலே