உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல

ஒருத்தன் காலைல மூட் அவுட்டோடவே எழுந்திருச்சான். நைட் தண்ணியடிச்சிட்டு மனைவியோட சண்டை போட்டது மனசை ரொம்ப பாதிச்சிருச்சு...
சுத்தி கிடந்த பீர் பாட்டில் எல்லாத்தையும் எடுத்திட்டு வெளிய வந்து முதல் பாட்டில எடுத்து சுவத்தில அடிச்சான்.
"என் மனைவியோட சண்டை போட நீதான் காரணம்.."
ரெண்டாவது பாட்டில எடுத்து, "என் மனைவிய நேசிக்காத்துக்கு நீதான் காரணம்" னு சொல்லிட்டு சுவத்தில அடிச்சான்...
மூணாவது பாட்டிலை எடுத்தான்.. "எனக்கு உருப்படியா ஒரு வேலை கிடைக்காத்துக்கு நீதான் காரணம்.." அதையும் தூக்கி அடிச்சான்...
நாலாவது பாட்டிலை எடுத்தான். அது ஓபன் பண்ணாம முழுசா அப்படியே இருந்துச்சு... உடனே, "உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீ ஓரமா உட்கார்..." அப்படின்னு தனியா எடுத்து வச்சிட்டான்...

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (8-Feb-16, 10:45 pm)
பார்வை : 189

சிறந்த நகைச்சுவைகள்

மேலே