கசிந்திடும் கண்கள்

நீரில் நீந்தும் மீன்களை போல்,
கண்ணீரில் நீந்தும் கண்கள்,

கணவனவன் மனமுடைந்து,
கவலைதனை மறைத்து,
கண்முன் வந்து நீர்பதை,
கண்களை கண்டு அறிந்துக்கொண்டேன்,
கைகோர்த்த மணவாளனின் - சோகத்தின்
காரணம் என்ன என்று அறியவில்லை,
கஷ்டத்தை பகிர்ந்து - எனக்கும்
கவலை தர அவர் நினைக்கவில்லை,

அதனை அறியும் பெண் மனது,
ஆறுதலும் கூற இயலாது,
அணைத்தபடி - எதையும்
அறியாதது போல்,
அழுத்தம் அதை மாற்றி,
அழுதிடும் கண்கள் இல்லை,
அரவணைக்கும் கைகள் உண்டு - என்பதை

உணர்த்தி முகமலர செய்து,
உலகையே வெல்லும் திடத்தை,
உடனே பெற செய்வாள்,
உள்ளம் கவர்ந்த கணவனவன்,
உள்ளம் மகிழ்ந்த பின்னே,
உயிரின் நினைவிற்கே வருவாள்,

மேகம் கசிந்திடும்,
மழைத்துளியை - ரசிக்கும்
மலர் மனது - ஏனோ
மணவாளன் கசிந்திடும்,

சிறு துளி வியர்வையையும்,
சில நொடியும் பொறுக்க முடிகிறதில்லை,

இதற்கு பெயர் தான் காதலோ !!!

எழுதியவர் : ச.அருள் (9-Feb-16, 7:34 pm)
பார்வை : 405

மேலே