பிராணி

வாத்தியார் சொல்லிக் கொண்டிருந்தார்.
“சில பிராணிகள் மனிதர்களுக்கு உபகாரமாய் இருக்கும். சில பிராணிகள் எந்த உபகாரமும் செய்வதில்லை. உபகாரம் செய்கிற பிராணிகளை வீட்டில் வளர்க்கிறோம்” என்று சொல்லி,
“பசு என்ன தரும்?” என்று கேட்டார்.
“பால்” என்றார்கள் பிள்ளைகள் கோரஸாக.
“கோழி என்ன தரும்?”
“முட்டை”
“ஆடு?”
“கம்பளி”
“ம்ம்ம். இதனாலதான் பசு, கோழி, ஆடு இதையெல்லாம் வீட்ல வளர்க்கிறோம்” என்று நிறுத்தி,
“குரங்கு என்ன கொடுக்கும்?” என்று கேட்டார்.
கொஞ்ச நேரம் அமைதி. பிறகு பின்னாலிருந்து ஒரு பலஹீனமான குரல்,
“ஹோம் வொர்க்” என்றது.

எழுதியவர் : பீமன் (9-Feb-16, 8:34 pm)
Tanglish : pirani
பார்வை : 207

சிறந்த நகைச்சுவைகள்

மேலே