காத்திருக்கிறேன்
என் பிம்பம் பார்க்கிறேன்
என்னையே பார்க்கிறேன்
ஆனால் நானல்ல.
என்னுடைய நிழல்
என்னை போன்ற உருவம்
நானல்ல...
எனக்கே நான்
அன்னியப்படுக்கிறேன்
வெளியில் ஒன்று
இதயத்தில் ஒன்று
என இருவேறாய்
மனம் ஏதேதோ பேச
இதழ்கள் மௌனமாய்
என் புன்னகை வறட்சியாக
விழிகள் மேகமாய்
இதயம்
துடிக்காமல் நடிக்கிறது
நானே மரமாக
நானே கிளையாக
நானே இலையாக
நானே மரத்தில் படரும் கொடியாக
எல்லா உருவிலும்
அரூபமாய் நான்
உன் பார்வை தேடி
கிளை மீது படர்கிறேன்
இல்லை என்ற பொது
இலை நுனிக்கு விரைகிறேன்
விழுந்து விடும் முன்
என்னில் கொழுந்துவிடும் இலை
பழுது படும் முன்
மீண்டும் கிளைக்கு தாவுகிறேன்
இந்நிலை என்னை வருத்த
உன் பெயர் கூரும்
ஞாபகங்களையும்
விலக்குகிறேன்
விரட்ட மனமின்றி
நிர்பந்தங்களில் கூட
நீஇருக்கும் நெஞ்சம்
நீராக இல்லை
நெருப்பாய் எரிக்கிறது
உன்மீது பழிவருமோ என்று
எனக்குள் புதைத்து
வெளியிலே மறைக்கிறேன்
இதற்கெல்லாம்
காரணம் நானே
கவலையில் மூழ்கி
கனவுகளில் மேகமாய்
உன்னுடன் கை கோர்க்கிறேன்
கற்று வீச பிரிகிறேன்
எப்படி ஆனாலும்
என்விதி எதுவானாலும்
திறந்திருக்கும்
என் மன வாசலில்
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
உன் வரவுக்காக