குற்றத்தை மறப்போம்

குற்றத்தை மறப்போம் !
தாளிட நினைப்பது தர்மசாலைக்கு குற்றம்!
வாளினை மறப்பது வீரனுக்கு குற்றம் !

நாளினைக் கடத்துவது நமக்கு குற்றம்!
தேளிற்கு விஷ கொடுக்கினில் குற்றம் !

வேரினை மறப்பது மரத்திற்கு குற்றம்!
நாரினை மறத்தல் மாலையின் குற்றம்!

அன்பினை மறத்தல் காதலின் குற்றம்!
பண்பினை மறத்தல் தமிழரின் குற்றம்!

அம்பினை மறத்தல் வில்லின் குற்றம்!
தம்பியை மறத்தல் சோதரன் குற்றம் !

உழைப்பை மறத்தல் தோள்களின் குற்றம்!
அழைப்பை மறத்தல் விருந்தினர் குற்றம்!

மன்னிப்பை மறத்தல் மனிதத்தின் குற்றம்!
அன்னையை மறத்தல் பிள்ளைதம் குற்றம்!

குற்றத்தை போற்றுவதும் பெருங்குற்றம்!
சுற்றத்தார் சேர்ந்திட குற்றத்தை மறப்போம்!


--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (11-Feb-16, 8:16 pm)
பார்வை : 102

மேலே